வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து தயாராகும் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பொல்லாதவன் படத்தைத் தொடர்ந்து அதே கம்பெனிக்கு குருப் கம்பெனி படம் இயக்குகிறார் வெற்றிமாறன். கதிரேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்காததால் தான் கொடுத்த கால்ஷீட் வீணாகி விட்டதாகக் கூறி அடவான்ஸ் பணத்தை நடிகர் சங்கம் முலம் திருப்பிக் கொடுத்தார் ஸ்ரேயா.
அதேநேரம் ஜெமினிக்காக தனுஷ் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் ஸ்ரேயா. இது தெரிய வந்ததும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பிரச்சனையை எடுத்துச் சென்றார் கதிரேசன்.
ஜெமினி படம் முடிந்த பிறகு கதிரேசன் படத்தில் ஸ்ரேயா நடித்துக் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்ரேயாவுக்கு உத்தரவிட்டது.
ஆனால், படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போயுள்ளது. இதனால் ஸ்ரேயாவுக்குப் பதில் விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.