எஸ்.ஜே. சூர்யா, ஷெரின் நடிப்பில் தொடங்கப்பட்ட வில் மீண்டும் தனது பயணத்தை தொடர்கிறது.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க சூர்யா, ஷெரின் நடிக்க, பிரபாகர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட வில் படம் சில காரணங்களால் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த நேரம் விஜயை வைத்து வில்லு என்ற பெயரில் படத்தை தொடங்கினார் பிரபுதேவா. இதனால் வில் படம் கைவிடப்பட்டதாக அனைவரும் முடிவு செய்தனர்.
ஆனால் வேறு பெயரில் மீண்டும் வில் தனது பயணத்தை தொடர உள்ளது. இந்த தகவலை சூர்யாவே கூறியுள்ளார். அடுத்த மாதம் கும்பகோணத்தில் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க உள்ளது. சூர்யா, ஷெரின் இதில் கலந்து கொள்கிறார்கள்.