கூல் புரொடக்சன் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் ஆறுமுகம். பரத் ப்ரியாமணியுடன் வில்லியாக ரம்யா கிருஷ்ணன்.
இட்லி கடை நடத்துகிறவராக வருகிறார் பரத். ரோட்டோரத்தில் கடை நடத்தும் இவருக்கு டாலரில் புரளும் ரம்யா கிருஷ்ணனுடன் லடாய். ஏன்? பரத்து அவர் அம்மாவின் கனவை நிறைவேற்றும் கட்டாயம் இருக்கிறது. அது என்ன கனவு?
சஸ்பென்ஸ் நிறைந்த இந்தக் கதையின் சுவாரஸ்ய எபிசோட் ப்ரியாமணி. கல்யானம் செய்து கொள்ளாமல் பரத்துடன் குடித்தனம் பண்ணுகிறார். அதாவது, ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா!
ஆறுமுகத்தின் இசை முகம் தேனிசை தென்றல் தேவா. தேவாவின் திரும்பி வரவு அமர்க்களமாக இருக்கும் என்றார் சுரேஷ் கிருஷ்ணா.