நாய்க்குட்டியில் நிக்கோல்!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:12 IST)
அடடா என்ன அழகு படத்தில் நடித்துவரும் நிக்கோலுக்கு சின்ன நமிதா என்று பெயரெடுக்க ஆசை. பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, உடையை மட்டும் அவரைப் போலவே எடுக்கிறார்.

இந்த கஞ்சத்தன காஸ்ட்யூம் தேர்வுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நாலாபக்கமிருந்தும் வலை வீசாமலே வாய்ப்புகள் வருகின்றன.

பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ. துரையின் 'நாய்க்குட்டி' படத்தில் பிரசன்னாவை மரத்தை சுற்றி டூயட் பாடி, காதலிக்கப் போகிறவர், வேறு யாருமில்லை நிக்கோல்தான்.

ஒல்லியான தனது வைக்கோல் உடம்பை 'கும்'மென்று மாற்றினால், நமிதாவே தள்ளிதான் நிற்க வேண்டும் நிக்கோலிடம்.

வெப்துனியாவைப் படிக்கவும்