கறுப்புக்கு மாறிய கதாநாயகி!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (13:06 IST)
உடம்பு இளைத்து, தோலை கறுத்து கேரக்டர்களுக்காக உடம்பை உலைக்களமாக்குகிறவர்கள் பெரும்பாலும் நடிகர்கள்தான். நடிகைகளை சொல்லி குற்றமில்லை. மரத்தை சுற்றி டூயட் பாட உருவத்தை மாற்றும் அவசியம் இல்லையே.

வெயில் வசந்தபாலனின் அங்காடித்தெரு கதாநாயகி இதிலிருந்து வித்தியாசமானவர். லோயர் மிடில் கிளாஸ். வேலை செய்து சருமம் கறுத்தவர். கேரக்டருடன் கச்சிதமாக பொருந்த, தனது உஜாலா கலரை கறுப்பாக மாற்றியிருக்கிறார் கதாநாயகியாக நடிக்கும் அஞ்சலி.

ஆயும் செய்வோமில் நடித்த அஞ்சலியா இது என்று கேட்கும்படி இருக்குமாம் அங்காடித்தெருவில் இவரது தோற்றமும் நடிப்பும்.

இன்னொரு கற்றது தமிழ்?

வெப்துனியாவைப் படிக்கவும்