சண்டையும் சாகசமும்!

புதன், 17 செப்டம்பர் 2008 (19:28 IST)
புதுமுகங்கள் வைத்து எடுத்திருந்தாலும் படம் நல்ல லாபத்துக்கு விலைபோனதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் தயாரிப்பாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம்.

இவரது மகன் விஜய சிரஞ்சீவியை வைத்து எடுத்த படம் 'சூர்யா'. சண்டைக் காட்சிகளுக்கும், சாகச நிகழ்ச்சிகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். விநியோகஸ்தர்களுக்கான ஷோ போட்டுக் காட்டயதில், படம் பார்த்த விநியோகஸ்தர்கள் பாராட்டியதோடு படத்தையும் வாங்கியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட பிரிண்ட்டுகள் விற்றதால் சந்தோஷமாக படத்தை வெளியிட இருக்கிறார்.

மேலும், எழுபதடி பள்ளத்தில் விழுந்த குழந்தையை ஹீரோ காப்பாற்றும் காட்சி பரபரப்பாக பேசப்படுவதோடு, யாரு இந்த ஹீரோ? என்று தமிழ் சினிமா தன் மகனைத் திரும்பிப் பார்க்கும் என்று சவால் விடுகிறார்.

ஊருக்கெல்லாம் சண்டை காட்சி அமைத்துக் கொடுக்கும் மாஸ்டர் தன் மகன் ஹீரோவாகும் படமென்றால் சண்டைக் காட்சிகள் லேசுபட்டதாகவா இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்