மாட்டுவாரா மாதவன்?

சனி, 6 செப்டம்பர் 2008 (19:51 IST)
ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்குப் பிறகு தங்கர்பச்சானின் வேகத்துக்கு குறைந்தது மூன்று படங்களையாவது அவர் இந்நேரம் இயக்கியிருக்க வேண்டும். ஆனால், அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிப்பே வெளியிடாமல் இருக்கிறார் தங்கர்.

விமர்சனத்தில் நல்ல படம் என்று எழுதுகிறார்கள். சந்தோஷம். ஆனால் கலெக்சன்? அழகியை தவிர்த்து நிறைவான லாபம் எந்தப் படத்திற்கும் இல்லை. மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகரை வைத்து கதை பண்ணலாம் என்று தங்கர் தனது பாதையை மாற்றிக்கொண்டதே தாமதத்திற்கு காரணம்.

அடுத்தப் படத்துக்கான கதை தயார். படத்தை தயாரிக்க ஜங்கரன் இண்டர்நேஷனல்¤ம் தயார். ஆனால், கதாநாயகன்? மாதவன் நடித்தால் நன்றாக இருக்கும் என நெருக்கமானவர்களிடம் விருப்பம் தெரிவித்து வருகிறார் தங்கர்.

கலைப் படங்களுக்கு முன்னுரிமை என மாதவன் அறிவித்துள்ளதால் தங்கரின் விருப்பம் மிக விரைவில் நிறைவேறலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்