கோடம்பாக்கத்தை கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு செய்தி. வார்னர் பிரதர்ஸ், ஆக்கர்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பில்லா இரண்டாம் பாகத்திலிருந்து விலகுகிறார் அஜித்!
செய்தியுடன் சின்ன சின்ன காரணங்களும் சொல்லப்படுகிறது. அஜித் அளவுக்கு சம்பளம் கேட்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன் என்பது அதில் ஒன்று.
வார்னர் பிரதர்ஸ் வேறு பல படங்களையும் தயாரிக்கிறது. எத்தனை படங்களை தயாரித்தாலும் தனது படமே முதலில் வரவேண்டும் என நினைக்கிறாராம் அஜித். அது முடியாது என தெரிந்ததால், அந்த புராஜெக்டிலிருந்தே விலக தீர்மாமினத்துள்ளார் என்கிறார்கள் வேறு சிலர்.
மர்மயோகி குறித்து இப்படி குழப்படியான செய்தி வந்தபோது அறிக்கை மூலம் நேர் செய்தார் கமல். அஜித் கமலை பின்பற்றினால், தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.