அறுபது கோடி கொடுத்து வாங்கிய பிரமிட் சாய்மீராவுக்கு நஷ்டம் 40 கோடி. மற்ற விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 13 கோடி.
நஷ்டஈடு... இல்லையேல் சூஸையிடு! இது தெலுங்குதேச விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் போர்க்கொடி. மொத்தத்தில் பாபாவே மேல் என்று சொல்ல வைத்துவிட்டது குசேலன்.
நஷ்டஈடு கிடைக்காவிடில் கவிதாலயா மற்றும் ரஜினி படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செலயாளர் பன்னீர்செல்வத்தை நேற்று அழைத்து பேசினார் ரஜினி.
நஷ்டமடைந்தவர்களுக்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டஈடாக தரப்படும் என அப்போது உறுதி அளித்தார் ரஜினி. தயாரிப்பாளர்கள் பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினிதத், இயக்குனர் பி. வாசு மற்றும் ரஜினி இணைந்து கூட்டாக இத்தொகையை அளிக்கின்றனர். இதில் ரஜினியின் பங்கு மட்டும் மூன்று கோடி!
குசேலனால் அதிகம் நஷ்டமடைந்தது பிரமிட் சாய்மீரா. ஏறக்குறைய 40 கோடி. எப்படி ஈடு செய்வது?
ரோபோ முடிந்ததும் பிரமிட் சாய்மீராவுக்கு படம் நடித்துக் கொடுப்பார் ரஜினி என்கிறார்கள், அவரது மனம் அறிந்தவர்கள்.