செய்யாறு ரவி - சீரியலில் இருந்து சினிமாவுக்கு!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:41 IST)
தொலைக்காட்சியில் மெகா தொடர் இயக்கிக் கொண்டிருக்கும் செய்யாறு ரவி மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

இவர் இயக்கிய படங்கள் முதலுக்கு மோசம் செய்ததில்லை. கடைசியாக இயக்கிய ரொமாண்டிக் காமெடி அரிச்சந்திரா, உலக தொலைக்காட்சிகளில் பத்தாவது முறை பார்க்கும்போதும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

அரிச்சந்திராவுக்குப் பிறகு தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கிவிட்டவர், மீண்டும் சினிமாவில் ஆக்சன் கட் சொல்ல வருகிறார். இந்த முறை பெரிய டீம். ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் என ஹைடெக் தொழில்நுட்பக் கலைஞர்கள். ஹீரோ ஆர்யா.

படத்துக்குப் பெயர் இன்னும் வைக்கவில்லை. பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்