சத்யம் படத்தில் விஷால் - நயன்தாரா நடித்த நெருக்கமான பாடல் காட்சியில் சில இடங்களை கத்தரித்தது சென்சார். அந்தப் பாடலை முழுவதுமாக நீக்கியிருக்கிறது மலேசியா சென்சார் போர்ட்.
சத்யம் மலேசியாவிலும் வெளியாகிறது. மலேசியாவில் வெளியாகும் எந்தப் படமும் கடுமையான தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும். தொலைக்காட்சிகளுக்கும் இது பொருந்தும். அங்கு நாள் முழுக்க ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ் சானல், சினிமா நிகழ்ச்சிகளே இல்லாத மக்கள் தொலைக்காட்சி மட்டுமே.
சத்யம் படத்தின் பாடலை நீக்கியதோடு, வன்முறை அதிகம் என சில ஆக்சன் காட்சிகளையும் நீக்கியிருக்கிறார்களாம்.
கோலாலம்பூரில் நடக்கும் சத்யம் பிரிமியர் ஷோவில் விஷால் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.