நூறு முகங்களின் 'முதல் முதல் முதல் வரை'

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (20:45 IST)
முருகனுக்கே ஆறுமுகம்தான். அறிமுக இயக்குனர் கிருஷ்ணனின் படத்திற்கு நூறு முகங்கள். நம்பினால் நம்புங்கள்... ஒரே படத்தில் நூறு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

கிருஷ்ணன் சேஷாத்திரி கோமடம்! இதுதான் கிருஷ்ணனின் முழுப் பெயர். தனது பெயரைப் போலவே படத்தின் பெயரையும் குழப்பமாக வைத்துள்ளார். 'முதல் முதல் முதல் வரை'. சுருக்கமா M3V.

கிருஷ்ணனின் அனுபவ க்ராப் மிரட்டல். மணிரத்னம். பி.சி. ஸ்ரீராம் இருவரும் இவரின் குருக்கள். சந்தோஷ் சிவனுடன் இணைந்து விளம்பரப் படங்கள் எடுத்த அனுபவமும் உண்டு.

படத்தின் ஹீரோ, ஹீரோயின் சத்யஜித், சிந்துஜா தொடங்கி அனைவருமே புதுமுகங்கள். மொத்தம் நூறு பேர். ஆப்ரிக்கர், டாக்டர் பட்டம் பெற்ற தீவ்னா ஆகியோரும் இதில் அடக்கம். மெட்ரோ சிட்டி இளைஞர்களை பற்றிதான் கதை.

சரி, அதென்ன மூன்று முதல்?

படத்தின் கிளைமாக்ஸ பார்த்ததும் மீண்டும் முதலில் இருந்து பார்க்கத் தோன்றும். அதனால்தான் டைட்டிலையே மூன்று முதல் வைத்தேன்.

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா கிருஷ்ணா!

வெப்துனியாவைப் படிக்கவும்