ஜெயம் ரவி இதுவரை நடித்த படங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் ஒரே படத்தில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் கொண்டிருக்கிறார் ஜனநாதன். பேராண்மையில் ஜெயம் ரவிக்கு வன அதிகாரி வேடம். உடல் உழைப்பு அதிகமிருக்கும் என தெரிந்தே தான் ஒப்புக் கொண்டார்.
ஆனால், ஒரு நாள் முழுவதும் தலைகீழாக கட்டி தொங்கவிட்டதும் பொறி கலங்கிப் போனார். அடர்ந்த காடுகளில் ட்ரில் வாங்குவதோடு ரவியின் மானத்தையும் வாங்கியதுதான் சோகம்.
முள்ளுக்காடு பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, ஏறக்குறைய நிர்வானமாக நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஜனநாதன். கற்பழிப்பு காட்சியில் கூட கோட் பட்டனை கழற்றாத நாகரிகம் கொண்டவர்கள் தமிழ் சினிமா வில்லன்கள். ஜெயம் ரவி ஹீரோ. அவர் எப்படி முக்கால் நிர்வாணமாக நடிப்பது?
முடியவே முடியாது என மறுத்திருக்கிறார். நினைத்ததை சாதிக்கும் வரை ஒற்றைக் காலில் நிற்பவர் ஜனநாதன். சொன்னபடி செய்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிக்க, வேறு வழியின்றி ஆடை துறந்திருக்கிறார் ஜெயம் ரவி.
ஐந்து ஹீரோயின்கள் உள்ள பேராண்மையில் இவருக்கு ஒரு டூயட் கூட இல்லையாம்.