மோசர் பேருக்கும் இயக்குனர் சசிக்கும் நடுவில் சிறிய பிரச்சனை. சசியின் பெர்ஃபெக்சன் இதற்கு காரணம் என்கிறார்கள்.
சுமாரான ஒரு கதையை வருடக் கணக்கில் செதுக்கோ செதுக்கு என்று செதுக்கிறவர் சசி. டிஷ்யூம் படத்தை ஜீவாவுக்கு முன் வேறு ஹீரோ ஹீரோயினை வைத்து எடுத்தார்.
பல மாத டிஸ்கஷனுக்குப் பின் படப்பிடிப்புக்கு சென்றவர், எடுத்த காட்சிகள் திருப்பதியாயில்லை என்று பத்தே நாளில் திரும்பி வந்தார். மீண்டும் டிஸ்கஷன்... மீண்டும் செதுக்கல்.
ஒரு வருட செதுக்கலுக்குப் பிறகு ஜீவா, சந்தியாவை வைத்து டிஷ்யூம் படத்தை எடுத்து முடித்தார். ஸ்ரீகாந்த், பார்வதி நடிக்கும் பூவிலும் இதே கதை. சில காட்சிகள் சரியில்லை ரீ-ஷூட் எல்லாம் தேவையில்லை என்கிறது படத்தை தயாரிக்கும் மோசர் பேர்.