கமலின் மர்மயோகி அடுத்த மாதம் தொடங்குகிறது. நட்சத்திர தேர்வு முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் சத்யராஜிடமும் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நெகடிவ்வான பதிலை கூறியிருக்கிறார் புரட்சித் தமிழன்.
மர்மயோகியில் வில்லனாக நடிக்க சத்யராஜை கேட்டதாகவும், அவர் நடிக்க மறுத்ததற்கு இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.
சிவாஜி படத்தின் போதும் வில்லனாக நடிக்க சத்யராஜிடம் கேட்டனர். ஒன்றரை கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார் சத்யராஜ். கால்ஷீட் கேட்டவர்களிடம் நான் ரஜினிக்கு ஒன்றரை கோடி தருகிறேன். என்னுடைய அடுத்தப் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என்று கேட்டார் சத்யராஜ்.
இதே கேள்வியை மர்மயோகிக்கு கால்ஷீட் கேட்டு வந்தவர்களிடமும் கேட்டுள்ளார் சத்யராஜ்.