கலக்கவரும் மல்லிகா காமினி!

வெள்ளி, 18 ஜூலை 2008 (19:45 IST)
தலைப்புக்கு முன்னால் கவர்ச்சியின் என்று சேர்த்தால் பொருத்தமாக இருக்கும். அந்தளவு மல்லிகா காமினியில் கொடிகட்டுகிறது இரு நடிகைகளின் கவர்ச்சி.

மல்லிகா ஷெராவத், ரேகா இருவரும் ஏமாற்றுப் பேர்வழிகள். மொரீஷியஸ் தீவுக்கு வரும் பணக்காரர்களை ஆசை காட்டி மோசம் செய்வது இருவரின் தொழில். இதற்குமேல் படம் எப்படி இருக்கும் என்பதை மல்லிகா ஷெராவத்தின் போஸ்டர் மட்டுமே பார்த்த குழந்தை கூட சொல்லிவிடும்.

'ஏ'கப்பட்ட காட்சிகள் 'அந்த' மாதிரி இருப்பதால் இதனை மல்லிகா காமினி என்ற மிட்நைட் மசாலா பெயருடன் தமிழில் வெளியிடுகிறார்கள். தசாவதாரத்தில் நடித்து மல்லிகாவுக்கு தமிழில் ரசிகர் வட்டம் உருவாகியிருப்பதால் காமினி கல்லாவை நிறைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள்.

காமினி கைகொடுப்பாளா?

வெப்துனியாவைப் படிக்கவும்