விஜய் படத்தில் வில்லனாக நடிக்க ஆசை - நடிகர் மோகன்!
வியாழன், 10 ஜூலை 2008 (20:35 IST)
ஒரு காலத்தில் தன் வீட்டு வாசலில் தயாரிப்பாளர் கூட்டத்தை காக்க வைத்த பெருமை மோகனுக்கு உண்டு. ஒரு டஜன் படங்களுக்கு மேல் வெள்ளி விழா கொண்டாடியது.
இளையராஜாவின் பாட்டும், மோகனின் கால்ஷீட்டும் கிடைத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பாக்கியவான்களாக கருதப்பட்டனர்.
அந்த மோகனுக்கு இடையில் சில பல வருடங்கள் இருண்ட காலமாகவே அமைந்துபோனது. இடையே அவரது பகீரத முயற்சியால் எடுக்கப்பட்ட 'அன்புள்ள காதலுக்கு' படமும் பெட்டிக்குள் போக, இப்போது 'சுட்ட பழம்' மூலமாக ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
என்னை திரைப்படம் ஒதுக்கினாலும் திரைத் துறையை நான் ஒதுக்கமாட்டேன் என்கிற மோகன், சுட்ட பழத்துக்கு பிறகு வில்லன் ரோலில் நடிக்க ஆவலாய் இருக்கிறாராம். அதுவும் யாருக்கு? அஜித், விஜய் படங்களில் அசத்தல் வில்லனாக வலம் வருவாராம்.