மதுரை நகரில் குறும்பட, ஆவணப்பட விழாக்கள்!

வியாழன், 10 ஜூலை 2008 (20:33 IST)
திரைப்படங்களில் மட்டுமே திருப்தியடைந்துவிட்ட நமக்கு குறும்படங்கள் பற்றியோ, ஆவணப் படத்தின் அருமை பெருமைகள் பற்றியோ அறிய முடியாத நிலையில் நம் வெகுஜன ரசனை அமைந்துள்ளது.

மேலை நாடுகளில் திரைப்படத்துக்கு இணையாக குறும்படங்களும் பார்க்க, ரசிக்கப்படுகின்றன. நமக்கு டாகுமெண்டரி அல்லது ஷார்ட் ஃபிலிம் என்றாலே அது அறிவு ஜீவிகளின் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம். அந்த நிலைமை மாற குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி பட்டறைகளும், பட விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு "நிழல்" இதழும், தமிழ்நாடு ஆவணப்பட மற்றும் குறும்பட படைப்பாளிகள் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் பயிற்சி பட்டறை மதுரையில் ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது.

நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் என பல்துறை பயிற்சி வகுப்புகளும், உரைகளும் இடம்பெறுகின்றன. உலகின் மிகச்சிறந்த ஆவண, குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. திரையுலகப் பிரபலங்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்