ஆஸ்கர் மூவிஸ் வி. ரவிச்சந்திரன் வழங்க ஆர். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் முட்டலும் மோதலுமாக தயாராகி வரும் படம் மாஸ்கோவின் காவிரி. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்குனராக புரமோஷனாகியிருக்கும் படம்.
விஜயின் வில்லு படத்திம்றகு ஒளிப்பதிவு ஒருபுறம், மாஸ்கோவின் காவிரி இயக்கம், ஒளிப்பதிவு இன்னொருபுறம் என 24 மணி நேரமும் றெக்கை கட்டி பறக்கிறார் ரவிவர்மன்.
மாஸ்கோவின் காவிரிக்காக ஃபிலிம் சிட்டியில் ஆர்ட் கேலரி ஒன்றை தோட்டா தரணி அமைத்துள்ளார். நிஜ ஆர்ட் கேலரி தோற்றுவிடும். அத்தனை அழகு, யதார்த்தம். பார்த்தவர்கள் பத்மஸ்ரீ தோட்டா தரணியை வாய் வலிக்க பாராட்டியிருக்கிறார்கள்.
படத்தில் மூன்றே கதாபாத்திரங்கள் ஹர்ஷவர்தன், ராகுல் ரவீந்திரன் மற்றும் சமந்தா. இந்த மூன்று பேருக்குள் ஆறு மாதங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ஆறுகளின் பெயரை வைத்து அழகான கதையை எடுத்திருக்கிறார். கண்டிப்பாக கரை சேரும் என நம்பலாம்.