மீண்டும் பழைய டைட்டில்!

வெள்ளி, 27 ஜூன் 2008 (19:41 IST)
தனுஷ் காதல் கொண்டேன், திருடா திருடி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தடதடவென முன்னேறிக் கொண்டிருந்த நேரம். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிப்பதாக விளம்பரப் படுத்தினார்கள். படத்தின் பெயர் ஓடிப் போலாமா!

கதாநாயகி முடிவாகாததால் முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் தனுஷ் படத்தைப் போட்டு சிட்டி முழுவதும் போஸ்டர் ஒட்டினார்கள். மோசமான தலைப்பு என கலாச்சார காவலர்களால் கண்டிக்கப்பட்ட அப்படம், தொடங்கப்படாமலே கைவிடப்பட்டது.

பலரால் கண்டிக்கப்பட்ட ஓடிப் போலாமா பெயரில் புதிய படமொன்று தயாராகிறது. புதுமுகம் பரிமள் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி சந்தியா. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு பழைய கண்டனக்காரர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்களா?

தொடங்கும் போதே பரபரப்பை கிளப்பியிருக்கிறது ஓடிப்போலமா!

வெப்துனியாவைப் படிக்கவும்