பலநூறு படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. கதை சொல்லி அது பிடித்திருந்தால் ஆர்மோனிய பெட்டியை தொடுவார். அதிகபட்சமாக காட்சிகளில், பாடல் இடம்பெறும் சிச்சுவேஷனில் கரெக்சன் சொல்வார். இந்த எல்லை தாண்டி ஒருபோதும் சென்றதில்லை இசை ஞானி.
அப்படிப்பட்டவர் மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்ற ஜகன்மோகினி படப்பிடிப்பை காணச் சென்றது அனைவருக்கும் ஆச்சரியம்.
ராஜா போனபோது, பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஸ்வநாதன். திருமலை நாயக்கர் மஹாலில் இதற்கென்றே பிரமாண்ட அரங்கை கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி அமைத்திருந்தார்.
தனது பாடலை படமாக்கும் விதத்தை அருகிலிருந்து இளையராஜா சிறிது நேரம் ரசித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்று தனது பாடல் படமாகும் விதத்தை இளையராஜா ரசித்தது இதுவே முதல்முறை என பரவசப்பட்டது ஜகன் மோகினி யூனிட்.