திரையிட்ட இடத்திலெல்லாம் தீப்பிடித்த மாதிரி ஓடிக் கொண்டிருக்கிறது தசாவதாரம். UK-யில் ஏறக்குறைய இரண்டு கோடி வசூலித்துள்ளது. மலேசியாவில் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 6 லட்சம் அமெரிக்க டாலர்கள்.
சென்னையில் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் தசாவதாரம் முறியடித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் 97 லட்சம் வசூலித்த இப்படம், அதற்கடுத்த 6 நாட்களில் இரண்டு கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.
சென்ற வார இறுதி வரை 3 கோடி ரூபாய் வசூலித்து சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் உள்ளது.
குசேலன் வரும் வரை முதலிடத்திற்கு வேறு போட்டியில்லை என்பதால் இந்த வார இறுதியில் ஐந்து கோடியை தசாவதாரம் தாண்டும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.