மேகா நாயரின் இரு படங்கள்!

செவ்வாய், 24 ஜூன் 2008 (19:38 IST)
தங்கம் படத்தில் நடித்த மேகா நாயர் கைவசம் இப்போது இரண்டு படங்கள். இரண்டிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வித்தியாசமான வேடம். ஆனாலும் இரண்டிலும் ஒரேயொரு ஒற்றுமை மட்டும் உண்டு.

மேகா நாயர் நடிக்கும் இரு படங்கள் சிவமயம் மற்றும் பூவா தலையா. இந்த இரு படங்களையும் இயக்குகிறவர் சஞ்சய்ராம். ஒரே இயக்குனரின் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மேகா நாயர். சினிமா உலகில் எப்போதாவதுதான் இதுபோன்ற அதிசயம் நிகழும்.

கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியதால்தான் இந்த இரு படங்களிலும் நடிக்க மேகா நாயருக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

அழகான பெண்கள் சொல்லும் பொய்யும் அழகாகவே இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்