நாளை விஜய்க்கு பிறந்தநாள். வழக்கமான ஆர்ப்பாட்டங்களுடன் தனது மன்ற நிர்வாகிகளை ஷோபா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார் விஜய். இந்த சந்திப்பின்போது, தனது மன்றத்து கொடியை அறிமுகப்படுத்த இருக்கிறாராம் இளைய தளபதி.
கொடி அறிமுகப்படுத்த இருப்பதை ஏதோ கட்சி ஆரம்பிப்பது போல் கொண்டாட இருக்கிறது ரசிகர்கள் குழாம். முதலில் கொடி, அடுத்தது கட்சி... இதுதானே அரசியலில் நுழைந்த நடிகர்களின் ·பார்முலா என ஆர்ப்பரிக்கிறார்கள்.
நாளை கொடி அறிமுகப்படுத்தும்போது, அரசியல் ஆசையோ, நோக்கமோ தனக்கில்லை என்பார் விஜய். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்?
இந்த நிச்சியமின்மையில்தான் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.