மும்பையில் மர்மயோகி தொடக்க விழா!

சனி, 21 ஜூன் 2008 (20:44 IST)
உலக நாயகன் கமலுக்கு ஒரே அலர்ஜி பாலிவுட். ஏக் துகே கேலியே, ஹிந்துஸ்தான் (இந்தியன்), சாச்சி 420 (அவ்வை சண்முகி) என பல படங்கள் வடக்கே வெற்‌றிகரமாக ஓடினாலும் ஹேராம், அபய் (ஆளவந்தான்) படங்களின் தோல்விகளையே பூதக்கண்ணாடி வைத்து பெரிசுபடுத்துகின்ற அங்குள்ள ஊடகங்கள்.

இங்கிலாந்தில் இந்திப் படங்களின் வசூலை அதிரடியாக முறியடித்திருக்கிறது தசாவதாரம். கமலின் பெயரைக் கூட குறிப்பிடாமல் ஏதோ தமிழ்ப் படம் ஒன்று முதலிடம் பெற்றிருக்கிறது என போகிற போக்கில் விட்டேத்தியாக குறிப்பிட்டுள்ள இந்தி ஊடகங்கள்.

இந்தப் புறக்கணிப்பை புறந்தள்ளுவதற்கென்றே மர்மயோகியின் தொடக்க விழாவை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளார் கமல். அங்குள்ள கான்களையும், கபூர்களையும் முந்த வேண்டியது கமலின் கெளரவப் பிரச்சனையும் கூட.

அடுத்த மாதம் திட்டமிட்டுள்ள மர்மயோகி தொடக்கவிழா மும்பை ஓரியண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெறலாம் என்கின்றன உறுதி செய்யப்படாத தகவல்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்