பிரபலமாகும் விளம்பரப் பாடல்!

சனி, 21 ஜூன் 2008 (13:28 IST)
ஹாலிவுட்டில் படங்களை பிரபலப்படுத்த விளம்பரப் பாடல்களை எடுப்பதுண்டு. முன்னணி பாப் இசைக் கலைஞர்களை வைத்து எடுக்கப்படும் இப்பாடல்களில் படத்தின் கிளிப்பிங்ஸ்கள் இடம்பெறும். படம் அளவுக்கு பிரபலமாகும் விளம்பரப் பாடல்களும் உண்டு. உதாரணம், ஜேம்ஸ் கேமரூனினடைட்டானிக் படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல்.

தமிழில் படங்களிலேயே திகட்ட திகட்ட பாடல்கள் இருப்பதால் தனியாக விளம்பரப் பாடல் என்று எடுப்பதில்லை. முதன் முறையாக இயக்குனர் சசிகுமார் தனது சுப்ரமணியபுரம் படத்துக்காக விளம்பரப் பாடல் ஒன்றை எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து கிரீடம் விஜய் பொய் சொல்லப் போறோம் படத்துக்காக விளம்பரப் பாடல் ஒன்றை எடுத்துள்ளார். பொய் சொல்லப் போறோம் இயக்குனர் ப்ரியதர்ஷன் தயாரித்திருக்கும் முதல் தமிழ்ப் படம். வானம் வசப்படும் கார்த்திக், பியா, நாசருடன் நெடுமுடி வேணுவும் நடித்துள்ளார்.

மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி. ஸ்ரீகுமார் படத்துக்கு இசை. நா. முத்துக்குமார் எழுத, ஜாஸி கிஃப்ட் விளம்பரப் பாடலை பாடியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்