குரு என் ஆளு படத்திற்காக ஏவி.எம்.-ல் பாடல் காட்சி ஒன்றை எடுத்தார்கள். மொத்தம் ஏழு அரங்குகள். படத்தின் பாதி பட்ஜெட்டை முழுங்கியிருக்குமோ என ஆச்சரியப்படுத்தும் அழகான பிரமாண்ட அரங்குகள். அதை ஒன்றுமில்லாததாக செய்யும் கவர்ச்சி உடையில் மம்தா. உடன் மாதவன்.
வீசுவது என் காற்றுதா பிபிசி-யில் என் பேட்டிதான்...
ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல் ஒலிக்க பதினைந்துக்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் ஆடினார்கள் மம்தாவும், மாதவனும், பாடலைப் போலவே படத்தின் கதையிலும் கவர்ச்சி சற்றே தூக்கல்.
மாதவனின் காதலி மம்தா மீது அப்பாசுக்கு ஒரு கண். மாதவனுக்கு அப்பாஸின் எம்.டி. நாற்காலி மீது இரண்டு கண்கள். மம்தாவோ நினைத்ததை முடிக்க, தன்னையே இழக்கத் தயங்காத டேக் இட் ஈஸி டைப். இவர்கள் நடுவில் அப்பாஸின் மனைவி பிருந்தா பரேக்.
த்ரில்லான படம் எ சர்ட்டி·பிகேட் கொடுக்கும் செல்வா, அடுத்து பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்த் செல்லவிருப்பதாக தெரிவித்தார்.