மாளவிகாவை ஏமாற்றிய மேனேஜர்!
திங்கள், 16 ஜூன் 2008 (18:11 IST)
ஆடி சம்பாதித்ததை உட்கார்ந்த இடத்திலிருந்து ஒருவர் லவட்டினால் எப்படி இருக்கும்? லபோதிபோவென குதித்துக் கொண்டிருக்கிறார் மாளவிகா.
இவரது கால்ஷீட்டை கவனிப்பதும், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பேசுவதும் இவரது மேனேஜர் முனுசாமி. பேசுகிற சம்பளத்தில் ஏழு சதவீதம் முனுசாமிக்கு கமிஷன் என்பது அக்ரிமெண்ட்.
இந்த ஜென்டில்மேன் அக்ரிமெண்டடை மீறி, முனுசாமி ஏகப்பட்ட பணம் முழுங்கியிருக்கிறார். மாளவிகா முழுவாமல் இருக்கும் இந்த நேரத்தில் தான் விஷயம் அவருக்கு தெரியவந்தது.
சிங்கக்குட்டி படத்துக்காக முனுசாமி பேசியது நான்கு லட்சம். மாளவிகாவுக்கு கொடுத்தது மூன்று லட்சம். கமிஷன் போக முனுசாமி முழுங்கியது எழுபத்தியிரண்டு ஆயிரம்.
சிங்கக்குட்டி தயாரிப்பாளரை எதேச்சையாக சந்தித்தபோது, நிஜமான சம்பளம் மாளவிகாவுக்கு தெரியவந்திருக்கிறது. ஒரு படத்தில் இத்தனை ஆயிரங்கள் என்றால், மொத்த படத்திற்கும் சேர்த்து எத்தனை லட்சங்களோ என்று பதறிப்போய், நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
முதலை வாய்க்குள் ஸாரி, முனுசாமி வாய்க்குள் போனது இனி திரும்ப கிடைக்கவாப் போகிறது!