ஒருமித்த முடிவுக்கெல்லாம் வழியேயில்லை என்பது உறுதியாகிவிட்டது. ராம. நாராயணன் தலைமையிலான முன்னேற்ற அணிக்கு கடும் நெருக்கடியாக உருவாகியிருக்கிறது கேயார் தலைமையிலான முற்போக்கு அணி.
அடுத்த மாதம் 6 ஆம் தேதி தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல். தற்போதைய தலைவர் ராம. நாராயணன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
ராம. நாராயணனின் முன்னேற்ற அணிக்கு போட்டியாக கோயர் தலைமையில் முற்போக்கு அணி உருவாகியுள்ளது. இதில் ராதிகா, எஸ்.ஏ.சி. உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். யார் எந்தப் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதை விரைவில் அவிக்கப் போவதாகக் கூறினார் கேயார்.