கோலிவுட் - விவாகரத்து காலம்!

சனி, 14 ஜூன் 2008 (17:19 IST)
சினிமா நட்சத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள். கேரியர் மட்டுமல்ல, இவர்களின் மேரேஜும் மின்னி மறையும் நட்சத்திரங்களை போன்றதே.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மனைவி லலிதாகுமாரியை பிரியப் போவதாக பல மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தார். நாளுக்கு நாள் விரிசல் பெருசாவதால் இருவரும் முறைப்படி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழும் இன்னொரு மேஜாடி, ஊர்வசி, மனோஜ் கே.ஜெயன். 1999-ல் காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், கொடுமைப்படுத்தும் தனது கணவரிடமிருந்து விவகாரத்து பெற்றுத் தாருங்கள் என கோர்ட் படியேறியிருக்கிறார் ஊர்வசி.

நடிகை மோகினியும் அவர் கணவரும் கூட விவாகரத்து கோரியுள்ளனர். பதிவாகும் விவாகரத்து வழக்குகளைப் பார்த்தால் திரையுலகினருக்கு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டி வந்தாலும் வரலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்