சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்று அர்ஜுனுடன் குத்தாட்டம் போட்டு கோலிவுட்டில் நுழைந்தவர் தேஜாஸ்ரீ. சிங்கிள் பாடலில் இருந்து சோலோ நாயகியாக உயர்ந்திருக்கும் தேஜாஸ்ரீக்கு ஒரு கனவு. நடனத்திற்கு முமக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும்!
தேஜாஸ்ரீயின் அப்பா ஒரு நடன இயக்குனராம். அதனால் தேஜாஸ்ரீக்கு பரத நாட்டியம் முதல் குச்சுப்புடி வரை அனைத்து வகை நடனங்களும் அத்துப்படியாம். தனது திறமையை வெளிப்படுத்த சரியான களம் நடனம் என்பதால்தான் இந்த ஆசை.
இயக்குனர் வி.சி. குகநாதன் மூலம் தேஜாஸ்ரீயின் நீண்டநாள் கனவு நனவாகப் போகிறது. குகநாதன் அடுத்து இயக்கப் போவது நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதையை. இதில் கதாநாயகி தேஜாஸ்ரீ. படம் தொடங்கும் நாளை பரவசத்துடன் எதிர்நோக்கியுள்ளார் தேஜாஸ்ரீ!