கவர்ச்சிதான் மூலதனம் என்று வந்துவிட்டால் இயக்குனர்கள் கையிலெடுப்பது க்ரைம் த்ரில்லர் கதையை. தெலுங்கு இயக்குனர் ஓஷோ துளசிராமும் அந்த வகைதான்.
காதல் அழிவதில்லை உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்த சார்மி இப்போது தெலுங்கில் முன்னணி நடிகை. நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் நடிக்கும் ஒரே நேரடி தமிழ்ப் படம் லாடம்.
ஓரோ துளசிராம் சார்மியை மனதில் வைத்து உருவாக்கிய கதை மந்த்ரா. சார்மி பதினாலு ரீலிலும் கவர்ச்சி காட்டிய படம் என்பதால், படத்தை தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
கண்ணால் காண்பது எல்லாம் உண்மை இல்லை என்ற கருவை அடிப்படையாகக் கொண்டதாம் மந்த்ரா கதை.