திருமதியாகிறார் ஷகிலா!

புதன், 11 ஜூன் 2008 (19:46 IST)
இதயம் பலவீனமானவர்கள் பார்க்கக் கூடாத படங்கள் மட்டுமல்ல, படிக்கக் கூடாத செய்திகளும் உண்டு. அப்படியொரு ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சி செய்தி இது.

காலைக்காட்சி படங்களின் முடிசூடா ராணி ஷகிலாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம் ஒருவர். எதையும் தாங்கும் அந்த இதயம் கொண்டவர், ஷகிலாவின் ரசிகராம். துபாய் தொழிலதிபர் அவர் என்பது கூடுதல் தகவல்.

மலையாளப் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு சென்னையில் குடியேறினார் ஷகிலா. அவருடன் நடித்த (?) சக நடிகர் ஒருவர் அவருடன் குடியிருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல். இதனை மறுத்த ஷகிலா, துபாய் தொழிலதிபருடன் திருமணம் நடக்கயிருப்பதை மறுக்கவில்லை.

நான்கு மாநில நிருபர்களை அழைத்து ஷகிலா திருமண விஷயத்தை அறிவித்தால்... ப்ளீஸ், மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்