நடி‌ப்பு‌க்கு‌த் ‌திரு‌ம்‌பிய தெ‌ன்ற‌ல்!

புதன், 11 ஜூன் 2008 (18:38 IST)
தே‌னிசை‌த் தெ‌ன்ற‌ல் தேவா. பெயரை‌ப் போலவே தேனாக‌ப் பழக‌க் கூடியவ‌ர். இசையை‌த் த‌விர வேறொ‌ன்று‌ம் இ‌ல்லை எ‌ன்‌றிரு‌ந்தவரை நடி‌க்க இழு‌த்து‌க்கொ‌ண்டு வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர் ‌ஜி.‌கி‌ச்சா.

இவரது இய‌க்க‌த்‌தி‌ல் சு‌ந்த‌ர் ‌சி எ‌ன்கவு‌ண்ட‌ர் ‌ஸ்பெ‌லி‌ஸ்டாக த‌ீ பட‌த்‌தி‌ல் நடி‌க்‌கிறா‌ர். நாய‌கி ரா‌கி‌ணி. காமெடி‌க்கு ‌விவே‌க்.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் தேவா ‌சி‌றிய வேட‌ம் ஒ‌ன்‌றி‌ல் நடி‌க்‌கிறா‌ரா‌ம். நடி‌ப்பு எ‌ன்றது‌ம் நழு‌வி ஓடு‌கிறவ‌ர் '‌தீ'‌யி‌ல் எ‌ப்படி ‌சி‌க்‌கி‌க்கொ‌ண்டா‌ர் எ‌ன்று ந‌ண்ப‌ர்களு‌க்கு ஆ‌ச்ச‌ர்ய‌ம்.

தேவா‌வி‌ன் மக‌ன் ஸ்ரீகா‌ந்‌த் தேவாவை நடி‌ப்பு‌க்கு இழு‌க்க வட‌ம் தயா‌ரி‌த்து‌க்கொ‌ண்டு இரு‌க்‌கிறா‌ர்க‌ள் பல இய‌க்குந‌ர்க‌ள். பேரரசு எ‌ந்த‌ப்பட‌ம் தொட‌ங்‌கினாலு‌ம் ‌வி‌ல்லனாக நடி‌க்‌கிற‌ீ‌ர்களா எ‌ன்று ஸ்ரீகா‌ந்‌த் தேவா‌விட‌ம் கே‌ட்டு‌வி‌ட்டே சூ‌ட்டி‌ங்‌‌கி‌ற்கு‌க் ‌கிள‌ம்புவாரா‌ம்.

தே‌னிசையை‌க் க‌வி‌ழ்‌த்தவ‌ர்க‌ள் அவ‌ர் மகனை‌க் க‌வி‌ழ்‌க்காம‌ல் ‌விடுவா‌ர்களா!

வெப்துனியாவைப் படிக்கவும்