அம்மா கிரியேஷன்ஸில் விஜயகாந்த்!

திங்கள், 9 ஜூன் 2008 (19:47 IST)
இரட்டை குதிரை சவாரி விஜயகாந்துக்கு பழகிவிட்டது. அரசியலில் ஆள் பலத்தையும், சினிமாவிலதோள் பலத்தையும் காட்டி வருகிறவர், எங்கள் ஆசான் படத்திற்குப் பிறகு அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிக்கிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் தற்போது வெங்கட்பிரவுவின் சரோஜா படத்தை தயாரித்து வருகிறது. அதன்பிறகு தயாரிக்கும் படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். அவரை இயக்குவது விக்ரமன்.

வானத்தைப் போல படத்துக்குப் பிறகு விஜயகாந்தை வைத்து விக்ரமன் இயக்கும் படமென்பதால் படம் குறித் எதிர்பார்ப்பை இப்போதே கோடம்பாக்கத்தில் உணர முடிகிறது.

விஜயகாந்தும் ஒரு வெள்ளி விழா படம் தந்து எவ்வளவு நாளாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்