நாஞ்சில் நாட்டில் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்!
திங்கள், 9 ஜூன் 2008 (19:35 IST)
தென் மாவட்டங்களில் தமிழ்ப் படப்பிடிப்புகள் அதிகமாக நடந்து வருகின்றன. எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் இன்று நாஞ்சில் நாட்டில் தனது பயணத்தை தொடங்குகிறது.
ராஜமோகன் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் ஆதி ராமகிருஷ்ணன், தர்ஷனா இருவருமே புதுமுகங்கள்.
தர்ஷனாவின் உண்மையான பெயர் ஸ்வாதி. தமிழில் நிறைய ஸ்வாதிகள் இருப்பதால் தர்ஷனா என்று பெயர் மாற்றம்.
பல் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தாராம் தர்ஷனா. அவரது நல்ல நேரம் எஸ்.பி.பி. சரண், ராஜமோகன் பார்வையில் விழுந்தார். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தின் பார்வையே தர்ஷனா மீதுதான் விழப் போகிறது.