திங்கள், 9 ஜூன் 2008 (17:35 IST)
கட்சி மாநாடோ என நினைக்கும் அளவுக்கு கரைவேட்டிகள். சினிமா புழங்கும் ஃபோர் பிரேம் திரையரங்கில் அரசியலுக்கு என்ன வேலை என்று பார்த்தால், அது தமிழக அமைச்சர்களின் கூட்டம்.
புதிய படத்தின் ப்ரிவியூவுக்கு முதல்வர் கருணாநிதி சென்றால், அவருடன் ஒன்றோ இரண்டோ அமைச்சர்கள் உடன் செல்வார்கள். நேற்று நடந்தது தசாவதாரம் திரையிடல். முதல்வருடன் தலைநகரில் இருந்த எல்லா அமைச்சர்களும் சேர்ந்து கொண்டனர்.
முதல்வரை கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் வரவேற்றனர். படத்தை முழுமையாக ரசித்த முதல்வர் கமலையும், கே.எஸ்.ரவிக்குமாரையும் நேரிலும் பிறகு தொலைபேசியிலும் பாராட்டினார்.
ஆங்கில சப்-டைட்டிலுடன் அமெரிக்காவில் திரையிடுவதற்குப் பதில் அப்படியே தமிழில் ஹாலிவுட்காரர்களுக்கு திரையிட்டு காண்பிக்கலாம் என்றாராம் முதல்வர்.
நடிப்பு அளவுக்கு தொழிநுட்பத்தை பாராட்டியவர், படத்தில் உள்ள நகைக்சுவைப் பகுதிகளையும் குறிப்பிட்டு பாராட்டினாராம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் படம் பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் யூனிட்டுக்கு யாரையும் பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லை போலும்.