ரஜினி - என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது!

சனி, 7 ஜூன் 2008 (12:29 IST)
ரஜினியை குறித்த இப்போதைய சிச்சுவேஷன் சாங், என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது... இதைவிட வேறு பாடல் இருப்பது கடினம்.

குசேலனுக்காக கேரளாவில் நயன்தாராவுடன் ஆடிக்கொண்டிருந்தவர் அப்படியே இமயமலைக்கு எஸ்கேப் என்றொரு செய்தி கிளம்பியது. மற்றவர்கள் நினைப்பதை செயல்படுத்த ரஜினி என்ன சாதாரண ஆளா? சூப்பர் ஸ்டார்!

செய்திப்படி இமயமலைக்கு எல்லாம் செல்லவில்லை ரஜினி. செளந்தர்யாவின் சுல்தான் தி வாரியர் படத்துக்காக வியட்நாம் சென்றதாக இன்னொரு வதந்தி. ஆனால் இதுவும் உறுதியில்லை.

எங்கு சென்றாலும் ரோபோ குறித்து தவறாமல் ஷங்கருடன் கலந்தாலோசிக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில்.

எப்படியும் ரோபோ தொடங்கும் முன் ஆன்மிக பயணமாக இமயமலைக்கும், ஆரோக்கிய பயணமாக கேரள சித்த வைத்தியசாலைக்கும் கண்டிப்பாக செல்வார். அப்போது வளைத்துப் பிடிக்கலாம் என காத்திருக்கின்றன பத்திரிக்கைகள். அதுவரை... என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது கதைதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்