சுசி. கணேசன் இயக்கத்தில் ஆர்யா!

வெள்ளி, 6 ஜூன் 2008 (19:45 IST)
கடவுள் எப்போது கைவிடுவார் என காத்திருந்திருப்பார் ஆர்யா. நான் கடவுளுக்காக வளர்த்த தாடியையும், தலைமுடியையும் எடுத்ததுதான் தாமதம். கால் டஜன் படங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இன்னும் அரை டஜன் படங்கள் வெயிட்டிங்கில்!

முதல் படம் சர்வம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்களில் கரடுமுரடான ரவுடியாக காட்டியதால் சர்வத்தில் கலகலப்பான வேடம்.

சர்வம் முடிந்ததும் சுசி. கணேசனின் படம் கந்தசாமி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஆர்யாவிடம் ஒன்லைன் சொல்லி ஓ.கே. வாங்கியிருக்கிறார் சுசி. கணேசன்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஆர்.டி ராஜசேகர் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ஆர்யாவுக்கு மூன்று ஜோடிகளாம்.

அப்படியானால் பேச்சுவார்த்தையின் முடிவு சுபம்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்