சரித்திரம் நாயகி மாற்றம்?

புதன், 4 ஜூன் 2008 (20:24 IST)
சாமியின் சரித்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி என்றால் சட்டென்று தெரியும்.

அதில் அடக்க ஒடுக்கமாக வந்தவர், சரித்திரத்தில் ஆளே மாறப் போகிறார். சாமியின் புதிய படத்தில் ராஜ்கிரண், ஆதி என்று இரண்டு ஹீரோக்கள். ஹீரோயின் கதாபாத்திரமும் அவர்களுக்கு இணையானது. அதாவது அடாவடியில் குறிப்பாக ஆண்களுடன் சிலம்பம் ஆடும் அளவுக்கு துணிச்சலானது.

இந்த ஆண் தன்மை கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் முன்வராதபோது, துணிச்சலாக சிலம்பம் ஆட ஒத்துக்கொண்டார் மீனாட்சி.

மூக்கும் முழியுமாக இருக்கும் மீனாட்சி கையில் கம்பை கொடுக்க சாமிக்கு என்ன சங்கடமோ. மீனாட்சியை ஒப்பந்தம் செய்த பிறகும் வேறு வாட்டசாட்டமான நாயகி கிடைப்பாரா என தேடி வருகிறாராம். இது தெரியாமல் சிலம்பம் கற்கத் தொடங்கிவிட்டார் மீனாட்சி.

சரத்திரம் திணறிக் கொண்டுதான் முன்னேறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்