கரணின் அடுத்த படம்!

புதன், 4 ஜூன் 2008 (20:08 IST)
ஏ.பி. ஃபிலிம் கார்டன் என்ற பேனரில் 6.2, நீ வேணுண்டா செல்லம், ஓரம்போ ஆகிய படங்களைத் தயாரித்தவர்கள் ஆனந்தன், பழனிவேல். தற்போது இருவருக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தால் பிரிந்துவிட்டனர்.

அப்படித் தனித்தனியாக பிரிந்து படம் எடுக்கவும் முடிவு செய்தனர். அதன்படி பழனிவேல் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். கரண் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

'பக்தா' என்று தலைப்பிட்ட இப்படத்தை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதிய திருவாரூர் பாபு இயக்க இருக்கிறார். இவர் பிரபலமான இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்தவர். மற்றும் 'நீ வேணுண்டா செல்லம், எல். வெங்கடேஷனிடம் அசோஸியேட்டாகவும் வேலை பார்த்தவர். பழனிவேலின் நீண்ட நாளைய நண்பரும் ஆவார்.

இப்படத்திற்காக பாடல் கம்போஸிங் தற்போது நடைபெற்று வருகிறது. புதியவரான சக்தி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே கதையைக் கேட்ட கரண், காத்தவராயன் படம் முடிந்து தனது சொந்த பேனரில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடித்து முடிந்த பிறகே கால்ஷீட் கொடுப்பதாக கூறியிருந்தவர். சொன்னபடியே தற்போது கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கதையாக இல்லாமல் மிகவும் வித்தியாசமான படமாக இருக்குமென்று நம்புவோம். எழுத்தாளர் மட்டுமின்றி பத்திரிக்கையாளராகவும் இவர் இருந்ததால் மிகவும் எதிர்பார்ப்பு இருக்கிறது இவரின் படத்திற்கு. பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்