கந்தசாமியில் ஆசிஷ் வித்யார்த்தி!

புதன், 4 ஜூன் 2008 (19:58 IST)
ரகுவரனின் திடீர் மரணம் பாதித்த படங்களில் ஒன்று கந்தசாமி. சுசி. கணேசன் இயக்கும் இந்தப் படத்தின் சில காட்சிகளில் ரகுவரன் நடித்தார்.

இந்திராவிழா படத்தில் ரகுவரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாரே தவிர நடிக்கவில்லை. அதனால், ரகுவரன் கதாபாத்திரத்தில் நாசரை நடிக்க வைப்பதில் இயக்குனர் ராஜேஷ்வருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.

ஆனால், கந்தசாமி விவகாரம் வேறு. ரகுவரன் நடித்த காட்சிகளை படத்தில் வைக்கவும் முடியாது. அதன் தொடர்ச்சியை எடுக்கவும் முடியாது. இதனால் ரகுவரன் இடம்பெறும் காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிட்டு, ஆசிஷ் வித்யார்த்தியை வைத்து புதிதாக ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த எதிர்பாராத நிகழ்வில் நிகழ்வால் கந்தசாமியின் பட்ஜெட்டில் சில லட்சங்கள் எகிறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்