தூக்கத்தைக் கெடுக்கும் 'ஸ்மிதா'!

புதன், 4 ஜூன் 2008 (17:12 IST)
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இசை ஆல்பம் வெளியீட்டு கலக்கி வருபவர் ஸ்மிதா. தமிழ் சேனல்களை தற்போது ஆக்கிரமித்து உள்ளவர் என்று சொன்னால் மிகையில்லை.

webdunia photoFILE
தற்போது அதே மூன்று மொழிகளில் இவரின் பெயரிலேயே 'ஸ்மிதா' என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். ஒன்பது பாடல்கள் இதில் உள்ளன. இந்த இசை ஆல்பத்தின் பாடல்களுக்கு இந்தி இசையமைப்பாளர்களான சாஜித்-வாஜித் இசையமைக்க, தமிழ் பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார்.

ஆல்பம் வெளியிட்டதோடு 'சத்ரபதி', 'ஆட்டோ', 'சியோ' போன்ற சில தெலுங்குப் படங்களில் பாடவும் செய்துள்ளார். இவரின் ஆடலுக்கும், அழகுக்கும் மயங்கிய தெலுங்கு சினிமா உலகினர் நடிக்கவும் கேட்டுள்ளனர். ஆனால் இவர் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து ஆல்பம் வெளிடவும், சினிமாவில் பாடவும்தான் செய்வேன். நடிக்கமாட்டேன் என்கிறார். அதிலும் தமிழ்ப் படங்களில் நிறைய பாடல்கள் பாடி, நல்ல பாடகி என்று பெயரெடுக்கவும் விரும்புகிறார்.

இதையடுத்து உலக அளவில் பேசப்படும் ஆல்பங்களை தயாரித்து வெளியிடவும் திட்டம் வைத்துள்ளார் ஸ்மிதா. ஒட்டுமொத்த இளைஞர்களோட தூக்கத்தை கெடும்கனும்னு ஒரு அழகான பொண்ணு முடிவு பண்ணிட்டா முடியாமலா போகும்.