தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர் நடிகை ரேவதி. பாரதிராஜாவின் அறிமுகமான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு, ஒரு ஆங்கிலப் படத்தையும் இயக்கினார்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு நல உதவிகளையும் செய்து வருகிறார். பல்வேறு பொதுத் தொண்டு நிறுவனங்களிலும் உறுப்பினராக சேர்ந்து சேவை செய்து வருகிறார்.
இவர் தற்போது 'மும்பை கட்டிங்' என்ற இந்தி குறும்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைப் பற்றி பத்து நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் நடிகை சோனாலி குல்கர்னி நடித்துள்ளார். இவரோடு சேர்ந்து மொத்தம் பத்து இயக்குனர்கள் தனித்தனியாக 'மும்பை கட்டிங்' என்ற தலைப்பிலேயே இயக்கியுள்ளனர். இதில் அனுராக் கஷ்யப், சுதிஸ் மிஸ்ரா குறிப்பிடத்தக்கவர்கள்.
இப்படி இவர்கள் எடுத்த குறும்படங்களை தற்போது நடந்த கேன்ஸ் பட விழாவில் காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவரின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றுள்ளது இந்தப் படங்கள்.
இதுபோன்ற பல்வேறு சமுதாய சிந்தனைகளை மையமாகக் கொண்ட கதைகளைத் தேர்வு செய்து குறும்படங்களை இயக்க இருக்கிறார் ரேவதி. மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.