லேகா வாஷிங்டன். எஸ்.எஸ். மியூசிக்சில் காம்பயராக இருந்தவர். நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை, நீ சினிமாவுக்கு வந்தால் கொடிகட்டலாம் என்று ஆங்கிலத்தில் பேசி நடிக்க கூட்டிவந்தவர் சிம்பு.
பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருந்த 'கெட்டவன்' படத்தில் லேகாவை ஹீரோயினாக்கினார். அதன்படி பதிமூன்று நாட்கள் ஷூட்டிங் நடந்தது. கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் செலவு. அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. லேகா வேண்டாம் வேறு ஹீரோயினி வேண்டும். எடுத்தவரை தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் எடுக்கலாம் என்று சொல்ல, புரொடியூசருக்கு கோபம் வந்து படத்தை நிறுத்திவிட்டார்.
அதன்பின் அந்த அப்செட்டில் கொஞ்சநாள் காணாமல் போன லேகா, அதன்பிறகு காம்பயரிங் செய்வதையும் விட்டுவிட்டார். இதற்கிடையில்தான் 'ஜெயம் கொண்டான்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
அதுமட்டுமின்றி, நடந்துமுடிந்த ஐ.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டியின் காம்பயராகவும் இருந்தார். இதில் பெரிய சந்தோஷம் என்னவென்றால் அவரின் ஃபேவரி¨ட் ஹீரோ ஷாருக்கானை நேரில் சந்தித்ததுதானாம். அனைவரிடமும் அந்த சந்தோஷமான தருணத்தை சொல்லி மகிழ்கிறார்.
அதுமட்டுமின்றி, தற்போது இரண்டாவது படமாக மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் படம். 'ஓரம்போ' படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதி இயக்குனர்களின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவுள்ளார்.
இதன்மூலம் சிம்புவிடம் யார் பகைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் அதன்பின் 'ஓஹோ' என்று வருவார்கள். உதாரணம் நயன்தாரா, லேகா. எது எப்படியோ நல்லது நடந்தால் சரி.