இயக்குனராகிறார் விஷால்!

வெள்ளி, 30 மே 2008 (19:33 IST)
இந்த ஆறடி உயர நடிகருக்கு எல்லாமே அதிரடிதான். நடிக்கிற படத்தைப் போலவே இருக்கிறது இவரது குணமும்.

webdunia photoWD
செல்லமே படத்தில் விஷால் ரீமாசென் பின்னால் ஐஸ்கிரீமாய் உருகி ஓடியபோது யாரும் அவர் ஒரு ஆக்சன் ஹீரோவாக உயருவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அவரோ அடுத்தடுத்து ஆச்சரியங்களை தந்து கொண்டிருக்கிறார்.

சத்யம் படத்திற்குப் பிறகு தானே ஒரு படத்துக்கு கதை எழுதி இயக்கி நடிக்கிறாராம். இது குழந்தைகளை கவரும் சூப்பர் ஹீரோ கதை. இந்தப் படத்தை இயக்குவதற்காக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த படத்தையும் ஒதுக்கி வைத்திருக்கிறாராம்.

நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென இயக்கப் போகிறாரே, இவரை இயக்குனராக்கும் அந்த தைரியசாலி தயாரிப்பாளர் யார் என்று விசாரித்தால், அது விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா!

அண்ணன் பணம் என்றால் நடிக்கலாம், இயக்கலாம், இன்னும் என்னென்னவோ செய்யலாம்!