சொந்தப் பெயருக்கு திரும்பிய நடிகை!

வெள்ளி, 30 மே 2008 (19:31 IST)
படத்துக்கு ஒரு பெயர் மாற்றுவது நடிகைகளின் ஹாபி. வட்டாரம் படத்தில் அறிமுகமான அதிசயாவுக்கும் இந்த ஹாபி உண்டு. பேராண்மையில் நடித்துவரும் அதிசயாவின் தற்போதைய பெயர் வசுந்தரா!

ஏற்கனவே வசுந்தரா தாஸ் நடிகை கம் பாடகி இருக்கும்போது ஏனிந்த பெயர்? ஏனென்றால் இதுதான் அதிசயாவின் சொந்தப் பெயராம்.

உங்களை வேறு படங்களில் பார்க்க முடியவில்லையே என்று கேட்டால், பேராண்மைக்கு ஏழு மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன் அதுதான் காரணம் என்கிறார்.

பேராண்மையில் இவர் ஐந்து நாயகிகளில் ஒருவர். வில் வித்தை முதல் குதிரையேற்றம் வரை அனைத்து தற்காப்புக் கலைகளையும் ஒரு மாஸ்டரை நியமித்து வசுந்தராவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். இந்தப் பயிற்சியிலேயே ஒரு மாதம் ஓடிவிட்டதாம். படம் முடிந்தால் தமிழ் சினிமாவுக்கு ஐந்து விஜயசாந்திகள் கன்ஃபார்ம்!

வெப்துனியாவைப் படிக்கவும்