தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவர் ரோகிணி. அதே தமிழ் சினிமா உருப்படியாக உபயோகித்துக் கொள்ளாத திறமைசாலிகளிலும் இவர் ஒருவர்.
தொலைக்காட்சியில் ஏற்கனவே Talk Show நடத்தியுள்ள ரோகிணி, அதையே புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்குகிறார். இந்தமுறை கலைஞர் தொலைக்காட்சியில்!
அழகிய தமிழ் மகள் என்பது ஷோவின் பெயர். பெயரிலேயே நிகழ்ச்சியின் பெண்ணிய வாசத்தை நுகர முடியும். கே.எஸ். சேகர் இயக்குகிறார்.
நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் பணியை ஏற்றுக் கொண்டதன் மூலம், ரகுவரனின் இழப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் ரோகிணி. அழகிய தமிழ் மகள் பட்டத்தை ரோகிணிக்கு தாராளமாக தரலாம்.