சுல்தான் தி வாரியர் படத்தை இயக்கிக் கொண்டே தயாரிப்பிலும் புல்லட் ரயில் வேகத்தில் பாய்கிறார் சௌந்தர்யா.
நடிப்பில் உச்சம் தொட்டாலும் பிஸினசில் ரஜினி சோபித்ததில்லை. அவர் எடுத்த சொந்தப் படங்கள் சொதப்பலை மட்டுமே சந்தித்தன. வியாபார விஷயத்தில் தந்தையை தாண்டிவிட்டார் சௌந்தர்யா.
இவரது ஆக்கர் ஸ்டுடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து தெலுங்கு படமொன்றை தயாரிக்கிறது. மகேஷ்பாபு நடிக்க பூரிஜெகன்நாத் அதனை இயக்குவது தெரியும்.
தெரியாதது, சௌந்தர்யாவின் மும்மொழிப் படம்.
இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்ற மொழிகளில் தயாரிக்கிறார். மூன்றிலும் நடிப்பது மகேஷ்பாபு. இயக்கமும் பூரிஜெகன்நாத்தான்.
மகேஷ்பாபுவின் படமொன்று தமிழ், தெலுங்கில் தயாராக இருப்பது இதுவே முதன் முறை.