வாரிசுகள் வரிசையாக வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். ஒத்த ரூபா பாடலுக்கு குஷ்புவுடன் ஆடிய ஜான்பாபுவை நினைவிருக்கிறதா? டான்ஸ் மாஸ்டரான அவர் தனது மகன் விகாஷை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.
'நேசி' என்ற அந்தப் படத்தின் விசேஷம், சோனியா சூரி. வட இந்திய வரவு என்பது பெயரிலேயே தெரிந்திருக்கும். சோனியா சூரியை தெரியாதவர்களுக்கு நிச்சயம் அவரது அக்காவை தெரிந்திருக்கும்.
2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டாரே, நடாஷா, அவரது தங்கைதான் சோனியா சூரி.
'நேசி'யை தமிழக மக்கள் நேசித்தால் நடாஷாவும் கோலிவுட்டில் கால்பதிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம். அழகான சகோதரிகள்... வரவேற்காமல் போகுமா தமிழகம்!